கண்டியில் தொடரும் நில அதிர்வுகளால் இலங்கைக்கு பேராபத்து..!! சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை..!!

இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட தொடர் நில அதிர்வுகள் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான நில அதிர்வுகள் ஏற்படக் கூடும் என முன்னரே எச்சரிக்கப்பட்ட போதும், அது குறித்து அவதானம் செலுத்தவில்லை என சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அண்மையில் கண்டியின் பல பாகங்களில் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக இலங்கைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறிப்பாக விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு இந்த அதிர்வினால் ஏற்பட கூடிய ஆபத்தான நிலைமை தொடர்பில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுளள்து.கடந்த 29ஆம் திகதி ஏற்பட்ட நில அதிர்விற்கு முன்னர் மேலும் சில நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடந்த நாட்களாக கண்டி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.கடந்த 29ஆம் திகதி முதல் இதுவரையில் பல முறை ஹாரகம, அநுரகம உட்பட பிரதேசங்களில் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.29ஆம் திகதி இடம்பெற்ற பிரதான நில அதிர்விற்கு முன்னர் இரண்டு முறை அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. அவை விக்டோரிய நீர்தேக்கத்தில் அமைந்துள்ள நில அதிர்வு அளவீட்டில் பதிவாகியுள்ளது.கற் குகைகளுக்கு குண்டு வைத்தல் உட்பட பல விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளின் அவதானம் போதுமானதாக இல்லை என சுற்று சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.