வடக்கில் ஆரம்பமான புதிய திட்டம்….வியந்து பாராட்டும் பொதுமக்கள்..!!

ஐந்து மற்றும் அதற்கு மேல் பிள்ளைகளை பெற்றெடுத்த குடும்பங்களுக்கு கரைச்சி பிரதேச சபையினால் மாதாந்தம் மூவாயிரம் ரூபா பெறுமதியான சத்துணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் கலைவாணி தலைமையில் இடம்பெற்றது.2020ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பமாகும் குறித்த வேலைத் திட்டத்தில் இவ்வாண்டில் இதுவரை ஒன்பது பேர் மாத்திரமே தகுதி பெற்றுள்ளதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.இவர்களுக்கு மாதத்திற்கு மூவாயிரம் ரூபா பெறுமதியான சத்துணவினை வழங்குவதற்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது. ஒரு வருடத்திற்கு குறித்த சத்துணவுப் பொதிகள் பிரதேச சபையினால் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த நிகழ்வில் குடும்ப நல சுகாதார வைத்தியர் நிமால் கிஸ்ரோபன், குடும்பநல உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.