அரச வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள அதிரடி உத்தரவு..!!

உரிய பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் அரச நிறுவனத்திடம் உள்ள 9,704 வாகனங்கள் பயன்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.தற்போது பயன்படுத்தாத நிலையில் பாரிய அளவிலான வாகனங்கள் அரசாங்க நிறுவனங்களிடம் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி பழுது பார்த்து பயன்படுத்த கூடிய 4116 வாகனங்கள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பழுது பார்த்து பயன்படுத்த கூடிய வாகனங்களை உரிய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் செலவினங்களை குறைக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.