முடக்கப்பட்டிருந்த தாவடிக்கு இன்று காலை முதல் விடிவு..!

யாழ்ப்பாணத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் கிராமமான தாவடி கிராமம் இன்று காலை பாதுகாப்புத் தரப்பினரின் முற்றுகையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளியாக இனம்காண பட்டவரின் கிராமம் தாவடி ஆகும்.இந்த கிராமம் சில நாட்களாக பாதுகாப்புத் தரப்பினரின் முற்றுகைக்குள் வைக்கப்பட்டுள்ளதுடன் கிராமத்தில் இருந்து வெளியேற மற்றும் உள்நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது.இந் நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டது.