வடக்கு மாகாண செயலாளர்களுக்கு திடீர் இடமாற்றம்.!! உடனடியாக அமுலுக்கு..!

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர் பலரிற்கு நேற்றைய தினம் முதல் அதிரடியாக இடமாற்றங்கள் வடக்கு மாகாண ஆளுநர் பொனிபஸால் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட இடமாற்றங்களில் தற்போதைய ஆளுநர் செயலக செயலாளர் எஸ்.சத்தியசீலன் கொழும்பு அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.அவரது இடத்திற்கு தற்போதைய உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரான சரஸ்வதி மோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஏற்படும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வெற்றிடத்திற்கு தற்போதைய மகளிர் விவகார அமைச்சின் செயலாளரான வரதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் விவகார அமைச்சின் செயலாளராக தற்போதைய பேரவைச் செயலக செயலாளரான ரூபினி வரதலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதோடு பேரவைச் செயலகத்திற்கும் பதில் கடமைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.