தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த இளைஞன்.!! வவுனியாவில் இன்று காலை சோகம்.!

வவுனியா கூமாங்குளம் கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கூமாங்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (03) காலை 7.00மணி தொடக்கம் 8.00 மணி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தந்தையும், இளைஞனும் வீட்டில் இருந்துள்ளனர். தந்தை காலை 7.00 மணியளவில் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளார். பின்னர் 8.00 மணியளவில் குறித்த இளைஞனின் சகோதரன் வீட்டிற்கு வந்த சமயத்தின் வீட்டின் அறையினுள் இளைஞன் அறையில் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்ததை அவதானித்துள்ளார்.அதனையடுத்து, அயலவரின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.26 வயதுடைய தங்கவேல் சிவகுமார் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.