பிறக்கும் வருடம் நாட்டிற்கு எப்படி இருக்கும்

சார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது.திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.பிறக்கப் போகும் தமிழ் புத்தாண்டிலும் பொதுவாக நிறைய நன்மைகளும் சில பாதிப்புக்களும் ஏற்பட நடைபெறப்போகிறது.இதன் அடிப்படையில் இந்த ஆண்டு மழை, விவசாயம், தொழில் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

மழை இந்த ஆண்டு ஒன்பது புயல்கள் உருவாகி அதில் நான்கு புயல்கள் பலவீனம் அடைந்து மற்ற புயல்களினால் மிதமான மழை ஏற்படும். ஆறு ஏரி குளம் குட்டை கால்வாய்களில் ஓரளவு தண்ணீர் நிரம்பும். இந்த ஆண்டு புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வால் நட்சத்திரங்கள் தோன்றும்.இந்த ஆண்டு புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் ஓரளவு மழையும் – கடல் கொந்தளிப்பும் – கடல் சீற்றங்களும் ஏற்படும். ராகு பகவானுடைய சஞ்சாரத்தினால் இந்த ஆண்டு அதிகமான காற்று ஏற்படும். இதனால் கடலோர மக்களுக்கு உயிர் சேதம் பொருள் சேதம் ஏற்படும்.இந்த ஆண்டு மேற்கு பகுதியில் ஏற்படக்கூடிய காற்று கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தலாம். அயல்நாடுகளில் அமெரிக்கா ரஷ்யா வளைகுடா நாடுகளில் ஓரளவு பொருள் சேதம் ஏற்படலாம்.

தொழில் இந்த ஆண்டு அயல்நாடுகளில் மூலதனம் அதிகமாகும். ஏற்றுமதி இறக்குமதி மூலம் வருவாய் அதிகரிக்கும். இந்த ஆண்டு பூமி நிலம் வீடு மனை விலை சற்று குறையும். பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் எரிவாயு தங்கம் விலை அதிகரிக்கும்.இந்த ஆண்டு ராஜாவாக புதன் வருவதால் மத்திய அரசுகளில் நல்ல வருவாயும் பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட துறையில் முதலீடும் அதிகம் ஏற்படும். ராஜாவாக புதன் இருப்பதால் அரசுகளின் முயற்சியினால் கல்வித்தரம் சர்வதேச அளவில் உயரும்.மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நட்புறவு நீடிக்கும். மந்திரியாக சந்திரன் வருவதால் பெண்களுக்கு இந்த வருடம் நன்றாக இருக்கும். ராணுவம் சம்பந்தப்பட்ட துறைகளில் பல புதிய நவீன ஏவுகணைகள் சேர்க்கப்படும். காவல் துறை நவீனமாகும்.கார், லோரி, பஸ் இதர வாகனங்கள் நவீன மயமாக்கப்பட்டு விலை ஏறும். இந்த ஆண்டு சேனாதிபதியாக சந்திரன் வருவதால் போர் பதற்றம் தணிந்து பேச்சுவார்த்தைகளில் மூலமாக நாடுகளுக்குள் ஒற்றுமை ஏற்படும்.பொதுவாக இந்த ஆண்டில் சந்திரன் பலமாக இருப்பதால் ராணுவம் காவல்துறை ஊர்க்காவல்படை இதர துறைகளில் பெண்கள் அதிகமாக சேர்க்கப்படுவார்கள். மேக அதிபதியாக சந்திரன் இருப்பதால் வருட வெண்பாவையும் தாண்டி ஓரளவு மழை பெற முடியும்.

விவசாயம் அணைகள் முக்கால்வாசி நிரம்பும். காய்கறி வகைகள் – பழங்கள் – பருப்பு வகைகள் – எண்ணெய் வித்துக்கள் விலை ஏறும். சிறுதானியங்களின் உபயோகம் அதிகரிக்கும்.நீரஸாதிபதியாக குரு இருப்பதால் மதுவகைகள் – தேயிலை – காப்பி – லாகிரி வஸ்துக்கள் வகைகள் விலையில் நல்ல மாற்றம் ஏற்படும். இந்த ஆண்டு ஈரான், ஈராக், அமெரிக்கா, கொரியா ஆகிய நாடுகளில் உள்நாட்டு குழப்பங்கள் மனக்கசப்புகள் ஏற்படலாம்.அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பூமி வெடிப்பும் நிலநடுக்கம் ஏற்படும்.அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும். இந்த ஆண்டு மத்திய அரசு வரிகளில் மதிப்பை உயர்த்தும்.