தொழில் திட்டங்களுக்கு 4 சதவீத வட்டியுடன் கடன் பெறுதல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு வழங்கும் விசேட அறிவிப்பு..!!

கோவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களும் தனிப்பட்டவர்களுக்கும் வழங்கப்படும் 4 சதவீத வட்டியிலான ‘சௌபாக்யா கோவிட்-19 புத்துயிரளித்தல்’ கடன் திட்டத்தை வழங்கும் காலத்தை செப்ரெம்பர் 30ஆம் திகதிவரை நீடித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இதுதொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;நாணயச் சபை கூட்டம் கடந்த 19ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது. அதில் 4 சதவீதம் கொண்ட தொழிற்படு மூலதனக் கடன் திட்டத்தின் இறுதித் திகதியினை நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.

இதற்கமைய, கோவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களும் தனிப்பட்டவர்களும் சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் வசதியின் கீழான தமது கடன் விண்ணப்பங்களை தொடர்பான உரிமம்பெற்ற வங்கிகளுக்கு 2020 செப்ரெம்பர் 30ஆம் திகதிவரை சமர்ப்பிக்கமுடியும்.அதேவேளை, மேற்குறிப்பிட்ட வசதியின் கீழ் 36 ஆயிரத்து 489 விண்ணப்பதாரிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட கடன்களுக்கு ஒரு லட்சத்து 17 மில்லியன் பெறுமதியான தொகைக்கு ஒப்புதலளித்ததன் மூலம், 2020 ஓகஸ்ட் 18ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியின் கடன் தொகை ரூ.100 பில்லியன் கடன் தொகைகள் மைல்கல்லினைக் கடந்தது.ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களில் 2020 ஓகஸ்ட் 18ஆம் திகதி உள்ளவாறு, நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 25 ஆயிரத்து 365 வியாபாரங்கள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கிடையே 68.5 பில்லியன் ரூபாய்க்கும் கூடுதலான தொகையினை உரிமம் பெற்ற வங்கிகள் ஏற்கனவே பகிர்ந்தளித்துள்ளதாக, மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.