வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று மறைந்திருக்கும் 14 முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய சிவப்பு அறிக்கை..!! குற்றவியல் பொலிஸார் களத்தில்..!

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள பல்வேறு குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட 14 முக்கிய குற்றவாளிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களம் சிகப்பு அறிக்கை பிடியாணையை பெற்றுக்கொண்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சிகப்பு அறிக்கை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 14 குற்றவாளிகள் திட்டமிட்ட குற்றச் செயல்கள், கொலை, போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வரும் நபர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.இந்தக் குற்றவாளிகளை கூடிய விரைவில் கைது செய்து சட்ட நடவடிக்கைகளை எடுக்க விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு தடையேற்படும் என்பதால், அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது.அவர்கள் கைது செய்யப்பட்டதும் அவர்கள் தொடர்பாக தகவல்களை, நாட்டுக்கு வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும், ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.