செல்வச் சந்நிதி ஆலயத் திருவிழாவில் நேற்று மட்டும் 27 பவுண் நகைகள் கொள்ளை..!! இரு பெண்கள் அதிரடியாகக் கைது..!!

யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத் தேர்த் திருவிழா நேற்று நடைபெற்றிருந்தபோது சுமார்தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களிடமே 27 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.யாழ்.மாவட்டத்தில் ஆலய திருவிழாக்களை இலக்குவைத்து கொள்ளைக் கும்பல் வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்குள் வந்து கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. நல்லுார் கந்தசுவாமி ஆலய திருவிழாவிலும் கொள்ளையில் ஈடுபட்டிருந்தகும்பல் கைது செய்யப்பட்டிருந்தது. அந்த கொள்ளையர்களும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும் தொடர்ச்சியாக இப்படியான திருவிழா கொள்ளைகள் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.