மத்திய கிழக்கு தேசத்தில் திடீர் விபத்து…பரிதாபமாகப் பலியான இலங்கையர்..!

மத்திய கிழக்கு நாடொன்றில் ஏற்பட்ட விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அபுதாபி நகரத்தில் திடீரென எரிவாயுத் தொட்டி வெடித்தமையினால் விபத்து நேர்ந்துள்ளது.விபத்தில் மாத்தறையை சேர்ந்த 28 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.அவரது சடலம் அபுதாபியில் உள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.