இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 210 ஆக உயர்வு..!! புதிதாக ஏழு நோயாளிகள்…!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 210 ஆக உயர்வடைந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி இலங்கையில் முதலாவது கொரோனா நோய் தொற்றாளர் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறு பதிவானவர் ஓர் சீனப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.இலங்கையில் கொரோனா நோய் தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.நோய்த் தொற்றுக்கு இலக்காகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 55 என்பதுடன், 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை, 154 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற அடிப்படையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.