மட்டக்குளியில் இன்று காலை கோர விபத்து…இருவர் ஸ்தலத்தில் பலி..!!

மட்டக்குளிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறி ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதுண்டே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியிலிருந்த 18 மற்றும் 37 வயதுடைய நபர்கள் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்திசாலையில் சிகிச்கைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.விபத்தை ஏற்படுத்திய சாரதியை மட்டக்குளி பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.