இன்று அதிகாலை நடந்த கோர விபத்து…ஐந்து விரிவுரையாளர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்.!

பதுளை – மகியங்கனை – சொரணதொட்ட பகுதியில் ஏற்பட்ட விபத்தில் விரிவுரையாளர்கள் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


விரிவுரையாளர்கள் பயணித்த கார் இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி 40 அடி பள்ளத்தில் வீழ்ந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன்போது பெண் விரிவுரையாளர்கள் நால்வரும் ஆண் விரிவுரையாளர் ஒருவருமே படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தநிலையில், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.