புதிதாக நிர்மாணிக்கப்படும் அல்டயர் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய திடீர் விஜயம்!!

கொழும்பில் சுமார் 2 ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அல்டயர் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விஜயம் மேற்கொண்டுள்ளார்.பேர வாவியுடன் இணைந்ததாக இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்தக் கட்டடத்தின் பணிகள் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.இந்தக் கட்டடத்தின் நிலமாடி 40,000 சதுர அடிகளை கொண்டதோடு, 404 அதி சொகுசு வீடுகளையும் உயர்தரமான கடைத் தொகுதிகளையும் இது கொண்டுள்ளது.
இரண்டு கோபுரங்களைக் கொண்ட அல்டயர் கட்டடத் தொகுதியின் ஒரு கோபுரத்தில் 68 மாடிகளும் அடுத்த கோபுரத்தில் 63 மாடிகளும் உள்ளன.முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதோடு, நகர அபிவிருத்தி அதிகார சபை இதற்கான நிர்மாணப் பணிகளை கண்காணித்து வருகின்றது.இக்கட்டடத் தொகுதியின் சுமார் 98 வீதமான நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், எஞ்சியுள்ள பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.இத்தகைய நிர்மாணப் பணிகள் சுற்றுலாத்துறையினரை ஈர்ப்பதற்கு காரணமாக அமையுமென்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.