ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடித் தீர்மானத்தினால் சிறையிலுள்ள பெருமளவு கைதிகளுக்கு விரைவில் விடுதலை..!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அதிரடி தீர்மானத்திற்கு அமைய நாடாளவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் இருந்து பெருமளவு கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

சிறிய குற்றங்கள் தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 444 கைதிகள், பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளம் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்அதற்கமைய வெலிக்கடை மாத்திரம் 83 கைதிகளும், பல்லேகலை சிறைச்சாலையில் 54 கைதிகளும், குருவிட்ட சிறைச்சாலையில் 35 கைதிகளும் மஹர சிறைச்சாலையில் 30 கைதிகளும், அனுராதபுரம் சிறைச்சாலையில் 28 கைதிகளும் ஏனைய சிறைச்சாலைகளில் 29 பேரும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.சிறைச்சாலையில் தற்போது ஏற்பட்டுள்ள அதிக நெரிசலை கட்டுப்படுத்துவதற்றகாக இந்த கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.அபராதம் செலுத்த முடியாமல் சிறிய குற்றங்களின் கீழ் சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகள், சிறிய தவறுகள் செய்த 65 வயதிற்கும் மேற்பட்டவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர்.கொலை, கொள்ளை, துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட பாரிய குற்ற செயல்கள் தொடர்பிலான எந்தவொரு கைதிக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என சிறைச்சாலை ஆணையாளம் நாயகம் துஷார உபுல்தெனிய மேலும் தெரிவித்துள்ளார்.