இலங்கையில் ஒரேநாளில் 37 பேருக்கு கொரோனா தொற்று!!மொத்த எண்ணிக்கை 3,049 ஆக உயர்வு.!!

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 37 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இருவரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இருவரும் உள்ளடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், 32 பேர் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 868 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.அதேநேரம் இந்த தொற்றுக்கு உள்ளான 169 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.மேலும் இலங்கையில் இதுவரையில் 12 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.இதேவேளை, நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 26 ஆயிரத்து 111 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.