யாழில் மிகவும் தொன்மை வாய்ந்த பலரும் அறிந்திராத கலங்கரை விளக்கு.!! வடக்கில் இப்படியும் ஒரு பிரதேசமா..?

யாழ்ப்பாண மாவட்டத்தின் மிகவும் தொன்மையானதும் பழமையானதுமான கோவேளம் கலங்கரை விளக்கானது 1916ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களின் காலப்பகுதியில் இந்த கலங்கரை விளக்கு பாவனையில் இருந்ததாகவும், இக்கலங்கரை விளக்கினால், சுமார் 40 கிலோமீட்டர் வரை ஒளியினை பரப்ப செய்ய முடியும் எனவும் கூறப்படுகிறது. கோவேளம் எனும் இடம் காரைநகர் பிரதேசத்தில் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 25km தொலைவில் உள்ளது. இந்த கலங்கரை விளக்கினது உயரமானது 30m ஆகும். இது நாட்டில் நிலவிய இறுதி கட்ட போர் நிலவரங்கள் போது தாக்கப்பட்டதாகவும், பல காலங்களாக பாவனை நிலையில் இல்லாமலும் போனதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இன்றைய காலங்களில் இது மக்களின் பார்வைக்காக திறந்து விட பட்டிருக்கிறது. கலங்கரை விளக்கை தொடர்ந்து அதன் பின் பகுதியில் யாழின் அழகிய கடல் ஒன்றும் இருக்கிறது, கோவேளம் கடற்கரை.இத்தகைய தொல்பொருள் ஆவணம் பெரிதும் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையாத காரணத்தை பொறுத்து We Are Voyagers அணி, இந்த இடத்தை தமது YouTube பக்கத்தில் வீடியோ ஆவணப்படுத்தி உள்ளனர். மேலும், உள்ளூர் மக்களுக்கு தெரிந்த அளவு கூட, இந்த கலங்கரை விளக்கு பற்றி வெளியூர் மக்களுக்கோ அல்லது வெளிநாட்டு மக்களுக்கோ தெரியவரவில்லை. எனவே, இது பற்றிய விளக்கங்களையும் ஆவணங்களையும் பகிர்வதன் மூலம், இத்தகைய இடங்களுக்கு ஒரு அடையாளபடுத்த முடியும். காணொளி இணைப்பிற்கு…