இலங்கையில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 06 பேர் இன்று (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 18 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இருவரும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பிய இருவரும் கட்டாரில் இருந்து இலங்கை வந்த ஒருவரும் இதில் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னர் வந்த செய்தி:இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 03 பேர் இன்று (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இருவரும் கட்டாரில் இருந்து இலங்கை வந்த ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.,இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 135 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.மேலும் இந்த தொற்றிலிருந்து 2 ஆயிரத்து 868 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.