இலங்கையின் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புராதன கால புத்தர் சிலைகள்..!!

குமண காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் போது புது பட்டுன்கல பிரதேசத்தில் மிகப் பெரிய கற்பாறை ஒன்றில் செதுக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மற்றும் அதற்கு இருபுறமும் செதுக்கப்பட்டிருந்த அவலோகிதேஸ்வர் மற்றும் மைத்திரி போதிதர்மரின் இரண்டு சிலைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் தொல்லியல்த்துறை பேராசிரியர் ராஜா சோமதேவ தெரிவித்துள்ளார்.

இந்த சிலைகள் கிறிஸ்துவிக்கு பின் ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டிற்குரியவை எனவும் அவை ருகுணு பிரதேசத்திற்குரிய சம்பிரதாயங்களை கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.கண்டுப்பிடிக்கப்பட்ட சிலைகள் சுமார் ஏழடி உயரமானவை எனவும் இரண்டு சிலைகளில் தலைப்பகுதி சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சிலைகள் குறித்து இதுவரை எந்த இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் சோமதேவ குறிப்பிட்டுள்ளார்.மொனராகலை வெல்லஸ்ஸ குரல் அமைப்பின் பங்களிப்புடன் பேராசிரியர் ராஜா சோமதேவ உட்பட பட்டப்பின்படி நிறுவனத்தின் மாணவர்கள் இந்த கண்டுப்பிடிப்பில் பங்கேற்றுள்ளனர்.