இந்தியாவில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா.!! நேற்று மட்டும் 79 ஆயிரம் பேருக்குத் தொற்று..!!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது இந்தியாவிலேயே அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தைத் தொடுகிறது.அதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் 79 ஆயிரத்து 457 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 இலட்சத்து 19 ஆயிரத்து 169 ஆக அதிகரித்துள்ளது.இதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் 960 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது.அதேவேளை, 27 இலட்சத்து 72 ஆயிரத்து 928 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.இதனையடுத்து தொற்றுக்கு உள்ளான 7 இலட்சத்து 81 ஆயிரத்து 624 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 8 ஆயிரத்து 944 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக தொடர்ந்தும் மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகியன உள்ளமை குறிப்பிடத்தக்கது.