இலங்கையில் நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..!!

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3012 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 17 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.இதேவேளை, 2,860 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலைகளில் தற்போது 138 பேர் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, 12 பேர் கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாட்டிற்குத் திரும்பியிருந்த 12 பேரும் மாலைதீவில் இருந்து நாடு திரும்பிய மூவரும் இந்தியப் பிரஜைகள் இருவரும் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதேநேரம், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 860ஆக அதிகரித்துள்ளது.அதேபோல், இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 140 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.மேலும், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.அதேவேளை, இலங்கையில் இதுவரையில், 2 இலட்சத்து 19 ஆயிரத்து 162 பி.சி.ஆர் பரிசோதனகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.