கொரோனாவுக்கு எதிரான பேராட்டத்துக்காக 25 மில்லியன் ரூபாவை கையளித்தது இலங்கை கிரிக்கெட்!

முன்னதாக அறிவித்தபடி தேசிய கொவிட்-19 என்ற கொடிய நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் 25 மில்லியன் ரூபா நிதி உதவியை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது.

இந்த நிதியுதவியை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் நேற்று முன்தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்துள்ளார்.இதன்போது கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அலகப்பெரும, இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலவைர் திமுத் கருணாரத்ன, இருபதுக்கு – 20 அணியின் தலைவர் லசித் மலிங்க ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.