காணாமல் போனோரின் உறவுகள் ஒன்றிணைந்து யாழ் நகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்…!! விண்ணை அதிர வைத்த தாய்மாரின் கதறல்கள்..!!

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழில் மாபெரும் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் 10.30 மணியளவில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு செல்கின்றனர்.யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை அடைந்தவுடன் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மனுவொன்றை கையளிக்கவுள்ளதாக தெரியவருகிறது.இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே என்ற கோசத்தை கண்ணீர்மல்க கதறியழுது எழுப்பி வருகின்றனர்.இதேவேளை மற்றுமொரு பேரணி யாழ்ப்பாணம் சங்கிலியின் தோப்பிலிருந்து ஆரம்பித்து நல்லூர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை காரியாலயத்தை அடைந்து அங்கு மகஜர் கையளிக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் – மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் – மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by IBC Tamil News on Saturday, August 29, 2020