கிளிநொச்சி நகரில் கோர விபத்து.. ரிப்பர் மோதி பரிதாபமாகப் பலியான இராணுவச் சிப்பாய்..!!

கிளிநொச்சியில் இன்று மாலை நடந்த விபத்தில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். கிளிநொச்சி இன்று மாலை 4.00 மணியளவில் ஏ-9 வீதி 155 கட்டைப் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி நகர் பகுதியில் இருந்து இரண்டு டிப்பர் வாகனங்கள் 155 ஆம் கட்டை சந்தி பகுதியிருந்து பாரதிபுரம் திரும்பும் வேளையில் விசேட அதிரடிப்படையினர் முகாமிலிருந்துவந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வாகனம் மோதுண்டதில், சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார்.இல 55,படிநெகுடுவாவ,மயில்கஸ்வொவ சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய தனபாலகே ரோஷன் பிரதீப் (பி.சி 87958) பலியாகியுள்ளார் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி நகர் பகுதியில் இருந்த வந்த டிப்பர் வாகன சாரதியின் அசமந்தப் போக்கில் திருப்பியபோது, விசேட அதிரடிப்படையினர் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்தமுடியாமல் பாரதிபுரம் பக்கம் திருப்பிய ரிப்பர் வாகனத்துடன் மோதுண்டு பின்னால் வந்த டிப்பர் வாகனம் விசேட அதிரடிப்படையினரும் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மற்றவர் படுகாயங்களுடன் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இது தொடர்பான டிப்பர் வாகன சாரதி இருவரும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.