சர்வதேச விமானப் பயணங்களுக்காக மீண்டும் திறக்கப்படும் கட்டுநாயக்கா.!! அரசாங்கம் தீவிர ஆலோசனை..!

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு அரசாாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.இது தொடர்பில் இதுவரையில் பல தரப்பினரிடம் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதனால் எதிர்வரும் மாதம் வரையில் விமான நிலையங்களை திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்க்கும் இலங்கையர்கள் அனைவரையும் அழைத்து வந்த பின்னர் விமான நிலையங்களை திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இதற்கு முன்னர் விமான நிலையத்தை திறப்பதற்கு பல தடவைகள் தீர்மானிக்கப்பட்ட போதும், அதனை அமுல்படுத்தவில்லை.பிராந்திய நாடான இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவதால், விமான நிலையத்தை திறப்பது தாமதம் அடையுமென அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.