இலங்கையில் இன்று மேலும் ஆறு பேருக்கு கொரோனா..!

நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை 2,995 ஆக உயர்ந்துள்ளது.இன்று (29) ஆறு பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நாட்டுக்கு வந்த நான்கு நபர்களும், பிரித்தானியா, லெபனானில் இருந்து திரும்பிய ஒருவருமாக இன்று 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.அதன்படி 136 நபர்கள் தற்போது சிகிச்சை பெறுகின்றனர்.இன்று தொற்றிலிருந்து குணமடைந்த 7 பேர் வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 2,849 ஆக உயர்ந்தது.வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் இருந்து இரண்டு பேரும், மினுவங்கொட ஆதார வைத்தியசாலையிலிருந்து நான்கு பேரும், தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்திலிருந்து ஒருவரும் வெளியேற்றப்பட்டனர்.