புதிதாகப் பதவியேற்ற யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் நெகிழ்ச்சியான செயல்..!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் மூத்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.


இந்த நிலையில் கடமைகளை பொறுப்பேற்க முன்னர் ஆலய வழிபாடுகளை முடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு கடமையை பொறுப்பேற்க சென்றபோது, இதுவரை தகுதி வாய்ந்த அதிகாரியாக கடமையாற்றிய தனது மூத்த பேராசிரியர் கந்தசாமியிடம் ஆசி பெற்றுள்ளார்.புதிய துணைவேந்தரின் இந்த செயல் அங்கிருந்த பலர் மத்தியிலும் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.இதைத் தொடர்ந்து சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா கருத்து தெரிவிக்கையில்,யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2 ஆயிரம் ஊழியர்கள் கடமையாற்றுகிறார்கள்.11,000 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இது பெரிய குழு இந்த குழுக்களின் தலைமைத்துவம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களை சிறப்பாக செயற்படுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.இது கடவுளால் வழங்கப்பட்டுள்ள பதவியாகும் இங்கு கடமயாற்றும் ஊழியர்கள் இந்த பல்கலைக் கழகத்தை நேசித்து செயற்படுகின்றார்கள். இந்த பல்கலைக்கழகம் இந்த மக்களுடைய ஒரு சொத்து.யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு கிழமைகளாக யார் அந்த புதிய துணைவேந்தர் என மக்கள் வினவினார்கள்.யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள ஆர்வம் மிகப் பெரியது. எனவே இந்த பல்கலைக்கழகத்தினை மக்கள் மிகவும் நேசித்து செயற்படுகின்றார்கள்.கல்வியை ஆதாரமாகக் கொண்ட சமூகம் இந்த பல்கலைக்கழகம் மீது மிகவும் ஆர்வமாக செயற்படுகின்றது.கல்வி பாரம்பரியத்தின் கலைக்கோயில்.இந்த பல்கலைக்கழகம் ராமநாதனால் வழங்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரி இன்று பல்கலைக்கழகமாக மிளிர்ந்திருக்கின்றது.அடுத்த மூன்று வருடங்களுக்கு சிறப்பாக செயற்படுத்துவதற்காக என்னிடம் பொறுப்புத் தரப்பட்டுள்ளது.எனவே மிகப் பொறுப்புடனும், உணர்வுடனும் எனது கடமைகளை செய்வதற்கு அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.