யாழ்.காங்கேசன் கடற்பரப்பில் கடற்படையினரிடம் மாட்டிய தங்கக் கடத்தல் கும்பல்..!! 10 கிலோ தங்கம் மீட்பு..!

யாழ்.காங்கேசன்துறை கடற்பகுதியில் தங்க கடத்தல் கும்பல் ஒன்றை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் சுமார் 10 கிலோ தங்கத்தை மீட்டிருக்கின்றனர். இன்று அதிகாலை கடல்வழியாக இலங்கைக்கு தங்கம் கடத்திவந்த கும்பலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்ந்து கடத்திவரப்பட்ட 10 கிலோ தங்கம் கடற்படையினால் மீட்கப்பட்டிருப்பதுடன், கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களும், தங்கமும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.