பிச்சைக்காரிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 61வயதுப் பெண் அடித்துக் கொலை.!! இலங்கையில் நடந்த கொடூரம்..!

பிச்சைகாரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார். 61 வயதான பிச்சைக்காரியே அடித்து கொல்லப்பட்டிருக்கின்றார்.குறித்த சம்பவம் அனுராதபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. குறித்த பகுதியில் யாசகம் பெறும் 20 வயதுடைய யுவதிக்கும் உயிரிழந்த பெண்னுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.இதன் போது யுவதியால் கடுமையாக தாக்குதலுக்குள்ளான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.தகவல் கிடைக்கப் பெற்றவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலம் தொடர்பான நீதிவான் பரிசோதனைகளை முன்னெடுத்தன் பின்னர்,பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அநுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.கொலை தொடர்பில் 20 வயது யுவதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்,அநுராதபுரம் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.