வெளிநாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்திருக்கும் பயணிகளுக்கான ஒர் மகிழ்ச்சியான அறிவிப்பு.!! ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் அதிரடித் தீர்மானம்..!

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கு தொடர்ச்சியான விமான சேவைகளை வழங்க ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.இத்தாலி – மிலான்,பிரித்தானியா – லண்டன்,ஜப்பான் – டோக்கியோ,மாலைதீவு – மாலே,ஜெர்மனி – பிராங்பேர்ட்,பிரான்ஸ் – பாரிஸ்,அவுஸ்திரேலியா – சிட்னிக்கு தொடர்ந்து விமான சேவையை இயக்கப்போவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.விமான சேவையை பெற்றுக்கொள்ள விரும்பும் பயணிகள் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸின் காலி, கண்டி மற்றும் கொழும்பு அலுவலகங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.மேலதிக விபரங்கள் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் இணையதளத்தில் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.