இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 4 மாத குழந்தை குணமடைந்து வீடு திரும்பியது..!!

மேலும் நான்கு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்தது.புனாணை தனிமைப்படுத்தல் மையத்தில் கண்காணிப்பில் உள்ள பேருவளையை சேர்ந்த நால்வரே இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இதேவேளை, இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மிக இளைய கொரொனா தொற்றாளரான 4 மாத குழந்தை பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியது. கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாத்தாண்டியாவை சேர்ந்த இந்த குழந்தையே இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மிக இளையவராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.