கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஓர் மகிழ்ச்சியான தகவல்..

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை 2021 ஆம் ஆண்டு ஜனவரி இடம்பெறுமென அறிவிக்கக்பட்டுள்ளது.2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி பரீட்சையை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.அத்துடன், 2020 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி முதல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.