யாழில் இன்று அதிகபட்ச வெப்பநிலை.!! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை..!

யாழ்.மாவட்டத்தில் இன்று அதிகளவான வெப்பநிலை பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறும் வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.சூரியனின் தென் திசை நோக்கிய நகர்வு காரணமாக குறித்த நிலைமை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இன்று தொடக்கம் செப்டெம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக வானிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.