யாழில் நாளை முதல் அரிசி விலையில் புதிய கட்டுப்பாடு..!! ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டுமே.!!

அரசாங்கம் அறிவித்த கட்டுப்பாட்டு விலையின்படி நாளை முதல் யாழ்ப்பாணத்தில் அரசி விற்பனை செய்யப்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன், விலை அச்சிடாத பொருட்களின் விலைப்பட்டியலை காட்சிப்படுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபருக்கும், யாழ் வணிபர் கழகத்திற்குமிடையில் இன்று நடந்த சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.இதன்போது, யாழில் அதிகரித்துள்ள அரிசி விலையை கட்டுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது.இதன்போது, விலை நிர்ணயிக்கப்படாத மொட்டைக்கறுப்பான், ஆட்டக்காரி அரிசி வகைகளின் விலைகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது.விலை நிர்ணயிக்கப்பட்ட ஏனைய அரிசிகள் குறைந்த கால பயிர், வடக்கில் விளையும் மொட்டைக்கறுப்பன், ஆட்டக்காரி வகைகள் அதிக கால பயிர்.ஒரு மூட்டை- 70 கிலோ- நெல்லில் 40-45 கிலோ அரிசி பெறப்படுகிறது. இது 60 வீதமாகும்.ஒரு கிலோ நெல்லை அரிசியாக்கும் உற்பத்தி செலவு 8-10 ரூபா. பொதியிட 2 ரூபா செலவாகிறது. இது மாறாத உற்பத்தி செலவு.ஆனால், வன்னியில் இந்த அரிசிகளின் விற்பனை விலை அதிகரித்துள்ளது. 3,500 ரூபாவாக விற்கப்பட்ட ஒரு மூட்டை தற்போது 5,000 ரூபாவாகியுள்ளது“ என வர்த்தகர்கள் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

மொட்டைக்கறுப்பன், ஆட்டக்காரி வகைகளின் விலைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை ஆராய நாளை மீண்டும் சந்தித்து, அதற்கான பொறிமுறையொன்றை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.சம்பா அரிசியை வர்த்தகர்கள் பல விலைக்கு கொழும்பில் கொள்வனவு செய்திருந்தனர். 105 ரூபாவிற்கு கொள்வனவு செய்த வர்த்தகர்களும் இருப்பதாக குறிப்பிட்டனர்.ஆயினும், 90 ரூபாவிற்கு- கட்டுப்பாட்டு விலையில் – விற்பனை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.ஆட்க்காரி, மொட்டைக்கறுப்பன் மற்றும் விலை நிர்ணயிக்கப்பட்ட அரசிவகைகள் அனைத்து மக்களிற்கும் கிடைப்பதை உறுதிசெய்ய, அந்த இருப்பு முடிவடையும் வரை ஒவ்வொருவருக்கு தலா 2 கிலோ அரிசியே விற்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டவை அல்லது நிர்ணயிக்கப்படாதவை என எந்தப் பொருளை விற்பனை செய்தாலும், அதன் விற்பனை விலையை வர்த்தக நிலையங்கள் அனைத்தும் காட்சிப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.மொட்டைக்கறுப்பன், ஆட்டக்காரி அரிசிவகைகளின் விலையை கட்டுப்படுத்துவது குறித்து நாளை காலை 9.30 மணிக்கு யாழ் வணிகர் கழகத்திற்கும், நெல் ஆலை உரிமையாளர்களிற்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.இந்த சந்திப்பில் யாழ் மாவட்டத்திலுள்ள சகல அரிசி ஆலை உரிமையாளர்களையும் கலந்து கொள்ளுமாறு யாழ் வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த சந்திப்பு யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறும்.இதன்பின்னர் காலை 10.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில், மாவட்ட அரச அதிபருடன் சந்திப்பு இடம்பெறும்.