யாழ் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா இன்று காலை பதவியேற்பு.!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை மிக எளிமையாகத் தனது தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பல்கலைக் கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற சமய வழிபாடுகளைத் தொடர்ந்து, பீடாதிபதிகள், பல்கலைக்கழகப் பதிவாளர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்களால் துணைவேந்தர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட பேராசிரியர் சிறிசற்குணராஜா தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜாவை புதிய துணைவேந்தராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று தெரிவு செய்திருந்தார்.ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கோட்டாபயவின் பின்னணியில் இயங்கிய வியத்கம புத்திஜீவிகள் அமைப்பின் யாழ்ப்பாண கலந்துரையாடலிலும் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.