இரு இந்துப் பெண் சகோதரிகளை தத்தெடுத்து வளர்த்து ஜாம் ஜாம் என திருமணமும் செய்து வைத்த இஸ்லாமிய அண்ணன்.!!

ஒரு முஸ்லிம் நபர், 2 இந்து பெண்களை சகோதரிகளாக தத்தெடுத்து, அவர்களுக்கு இந்து முறைப்படியே கல்யாணமும் செய்து வைத்துள்ளார்.மாமியார் வீட்டுக்கு போகும் பெண்களை கட்டி அணைத்து கொண்டு இந்த சகோதரர் கதறி அழும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் அகமத் நகரைச் சேர்ந்தவர் பாபாபாய் பதான்.. இவருக்கு சகோதரிகள் யாருமே இல்லை.. அதற்காக ஏங்கி தவித்து கொண்டிருந்தார்.இந்நிலையில், ஆதரவற்றோர் ஆசிரமத்தில் இருந்து சகோதரிகளை தத்தெடுக்கவும் முடிவு செய்தார்.. அதன்படியே 2 பெண்களை தத்தெடுத்தார்.. அவர்கள் 2 பேருமே இந்துக்கள்.. அளவுகடந்த பாசத்தை அந்த பெண்களிடம் பொழிந்தார் பாபா.ஒரு குறையுமில்லாமல் வளர்த்தார்.தற்போது 2 பேருமே கல்யாண வயதை அடைந்துவிட்டனர்.. அவர்களுக்கு ஜாம் ஜாம் என்று கல்யாணமும் செய்து வைத்திருக்கிறார் பாபா.. அந்த சகோதரிகளின் விருப்பப்படியே, இந்து முறைப்படி இந்த கல்யாணம் நடந்துள்ளது.அகமத் நகர் மக்களே இந்த கல்யாணத்தை வாயை பிளந்து கெண்டு ஆச்சரியப்பட்டனர். ஊரே திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தியது.ஆரிஃப் ஷா என்ற செய்தியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பதிவிட்டுள்ளார்.மகாராஷ்டிராவில் உள்ள அகமத் நகரை சேர்ந்த பாபாபாய் பதான் என்ற முஸ்லிம், 2 ஆதரவற்ற சகோதரிகளை தத்தெடுத்து, அவரது சொந்த செலவில் இந்து முறைப்படி திருமணமும் செய்து முடித்துள்ளார். தனது மதத்தைக் கடந்த மனிதநேய செயலுக்காக பாபாபாய் பதான் பாராட்டப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளர்.அந்தக் கல்யாண போட்டோவையும் ட்விட்டர் பக்கத்தில் இவர் ஷேர் செய்திருந்தார்.2 சசோதரிகளும் கல்யாணம் முடிந்ததும், அண்ணனிடம் ஆசி வாங்க வருகிறார்கள்.அப்போது, கணவர் வீட்டுக்கு தன்னை விட்டு பிரிந்து செல்லும் அந்த பெண்களை கட்டி அணைத்தபடி பாபா கண்கலங்கி அழுகிறார். அந்த போட்டோதான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.இதை பார்த்ததும், பாபாவுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள் நெட்டிசன்கள்..சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் உருவாக்கும் பாபா போன்ற நல்ல உள்ளங்களை அனைவரும் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்ற கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.