இரகசியத் தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சற்றிவளைப்பில் யாழில் நான்கு இளைஞர்கள் அதிரடியாகக் கைது.!!

தோட்டத்திற்கு இறைக்கும் மோட்டார் கிடங்குக்குள் இருந்து கெரோயின் போதைப்பொருள் நுகர்ந்தனர் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 160 மில்லிக்கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் உரும்பிராய் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் செல்வபுரம் பகுதியில் தோட்டத்திற்கு இறைக்கும் மோட்டார் கிடங்குக்குள் இளைஞர்கள் ஒன்று கூடி, போதைப்பொருள் பாவிப்பதாக கோப்பாய் பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது கெரோயின் போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த சந்தேகத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 160 மில்லிக்கிராம் கெரோயினும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கன நடவடிக்கையை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.