இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளை யானை.!! தற்போது வெளிவந்துள்ள உண்மைத் தகவல்..!!

மாதுருஓயா தேசிய வனப் பகுதியில் வெள்ளை யானை ஒன்று சுற்றித் திரிவதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது.குறித்த யானையின் புகைப்படத்தை வனத்தின் கட்டுப்பாட்டாளர் புத்திக விதாரன தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.எனினும், இந்த யானை நீரில் குளித்து விட்டு வந்த பின்னர் வெள்ளை நிறம் இல்லாமல் போயுள்ளதுடன், சாதாரண யானையாக அது மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.களி மண் அல்லது ஏதாவது ஒரு பொருளை யானை தனது உடலில் பூசிக் கொண்டமையினால் இவ்வாறு அது வெள்ளை யானையாக காட்சியளித்துள்ளது.எப்படியிருப்பினும் இலங்கை காடுகளில் வெள்ளை யானை வாழ்வது தொடர்பிலான தகவல்கள் உள்ளதாக சுற்று சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.