100 அடி மரத்தில் ஏறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் பெண்.!!

100 அடி உயரமான மரத்தில் ஏறி 37 வயதான பெண் ஒருவர் உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகின்றார். பலாங்கொடைப் பகுதியில் குறித்த போராட்டத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.பலாங்கொட – தயவின்ன – ஹதகரிய பிரதேசத்தினை சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளார்.தாம் வசித்து வந்த நிலப்பரப்பினை சட்டபூர்வமாக பெற்றுக் கொடுக்குமாறு இவ்வாறு மரம் ஒன்றில் ஏறி உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளார்.எவ்வாறாயினும், குறித்த நிலப்பரப்பு தொடர்பிலான நீதிமன்றில் வழக்கு உள்ளதாக பிரதேச செயலாளர், சுட்டிக்காட்டினார்.எவ்வாறாயினும் குறித்த பெண்ணுக்கு மற்றும் ஓர் நிலப்பரப்பு வழங்கப்பட்டாலும் அதனை ஏற்க மறுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.