இலங்கை நாடாளுமன்ற மதிய உணவினால் பெரும் சர்ச்சை.!! கடுப்பான புதிய உறுப்பினர்கள்..!

புதிதாக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையில், நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவு தொடர்பான சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் பற்றி, நாடாளுமன்ற அதிகாரியொருவர் உரையாற்றிய போது, நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் 3,000 ரூபா பெறுமதியான மதிய உணவு வெறும் 200 ரூபாவிற்கு வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.இதையடுத்து கருத்து தெரிவித்த பல உறுப்பினர்கள், அந்த உணவை தாம் அருந்தியதாகவும், அது 3,000 பெறுமதியானதென யார் வரையறைத்தார்கள் எனச் சூடாக கேள்வியெழுப்பியுள்ளனர்.இந்த உணவை விரும்பவில்லை. வீட்டிலிருந்தே உணவை கொண்டு வருகிறேன் என ஒரு உறுப்பினர் அந்தக் ககூட்டத்தில் கூறியுள்ளார்