இந்தியாவில் தீவிரமாகப் பரவும் கொரோனா வைரஸினால் இலங்கைக்கு காத்திருக்கும் பேராபத்து…!! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை.!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் இலங்கையிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.நேற்று காலை 10.00 மணி முதல் இன்று காலை வரை நாட்டில் மேலும் 13 கொரோனா நோய் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது.இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால், இலங்கையிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.இந்தியாவிலிருந்து படகுகள் மூலம் இலங்கைக்குள் சட்டவிரோதமாக வருவபர்களை உடனடியாக நிறுத்த தவறும் பட்சத்தில் இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவுவதால், இலங்கை இன்னும் முழுமையாக வைரஸிலிருந்து விடுபட வில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.