கண்டு பிடிக்கப்படாத ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து பூமிக்கு வரும் ரேடியோ சிக்னல்.!! மிரண்டு போன விஞ்ஞானிகள்.!

சுமார் 3 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருந்து, அதுவும் கண்டு பிடிக்கப்படாத ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து பூமிக்கு ஒரு ரேடியோ சிக்னல் கிடைத்துள்ளது. முதன் முதலாக 2007ம் ஆண்டு இந்த சிக்னல் கிடைக்கப்பெற்றது. ஆனால் பின்னர் சில வருடம் அது பூமிக்கு வரவில்லை. ஆனால் கடந்த 2 வருடங்களாக அது மீண்டும் பூமிக்கு வர தொடங்கியுள்ளது. இதனை உலகி, பல்வேறு நாடுகளில் உள்ள ராடர்கள் உணர்ந்துள்ளபோதும்.

பிரித்தானியாவில் உள்ள மான்செஸ்டர் யூனிவர்சிட்டி வானவியல் ஆய்வாளர்கள், இது ஒவ்வொரு 157 நாட்களுக்கு ஒரு முறை பூமி நோக்கி வருகிறது என்று கண்டு பிடித்தார்கள். அது சரியான கண்டு பிடிப்பு என்றால். மீண்டும் ஆகஸ்ட் மாதம் அந்த ரேடியோ சிக்னல் பூமிக்கு வரும் என்று எதிர்வு கூறி இருந்தார்கள். தற்போது அந்த சிக்னல் மீண்டும் கிடைத்துள்ளது. எப்.ஆர் பி(Fast Radio Burst) என்று கூறுவார்கள். அதிவேகம் கொண்ட ரேடியோ அலைகள்.இதனை மனிதர்களால் உருவாக்க முடியும். மேலும் சொல்லப் போனால் ஒரு சூரியன் எரிந்து முடிந்து கறுப்பு வளையமாக மாறும் போதும் இது போன்ற ரேடியோ அலைகளை உருவாக்கும், என்றும் கூறப்படுகிறது. கிடைக்கப்பெற்றுள்ள ரேடியோ சிக்னல் மிக மிக குறைவாக செக்கனில் உள்ளது. இருப்பினும் இதனை ஆராய்ந்து வருகிறார்கள். இது ஒரு மொழியாக கூட இருக்கலாம். ஆனால் விஞ்ஞானிகள் அதிர்சியில் இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.