தீவிரமடையும் கொரோனா வைரஸ் பரவல்..!! யாழ். மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி..!

யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவடைந்து வருதவாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக எந்தவொரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கண்டறியப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.யாழ். போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பலருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த ஒரு வாரத்தில் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்படவில்லை.அதே நேரம் கொரோனா சந்தேகத்தில் தற்போதும் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யாழ். மாவட்டத்தில் இனங்காணப்பட்ட 7 கொரோளா நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் வீடு திரும்புவார்கள் எனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.