100 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸாரிடம் மாட்டிய நபர்..!!

காலி – ரத்கம, கந்தகொட பகுதியில் 100 மில்லியன் ரூபா பெறுமதிக்கொண்ட 11 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து டி.56 ரக துப்பாக்கி மற்றும் இரண்டு 9 மில்லி மீற்றர் ரக துப்பாக்கிகள், 82 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.இவை யாவும் காணி ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தெல்வத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கிடைத்த தகவலின் பேரிலேயே இன்றைய சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.