மிகவும் சுவையான புளிச்சாதம் செய்வது எப்படி ?

புளிச்சாதம் தேவையான பொருட்கள்: 1 சுண்டு தீட்டிய சேரல் அரிசி அல்லது வெள்ளைப் பச்சையரிசி 1 1/2 மேகரண்டி கடலைப் பருப்பு 1 மேகரண்டி துவரம் பருப்பு 1 தேகரண்டி வெந்தயம் 1 மேகரண்டி எள்ளு 1 தேக சர்க்கரை 40 கிராம் புளி – விதை நீக்கப்பட்டது 1தேகரண்டி மஞ்சள் தூள் 1 1/2 மேகரண்டி கடுகு 3 மேகரண்டி நல்லெண்ணை கருவேப்பிலை தேவையான அளவு 4 காய்ந்த செத்தல் மிளகாய் தேவையான அளவு உப்பு

செய்முறை:
ஒரு சூடான சட்டியில் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு இவற்றை பொன்னிறமாக வரும்வரை சிறிது வறுக்கவும். பருப்பு வறுபட்டவுடன் வெந்தயைத்தை சேர்த்து வறுக்கவும். அடுப்பை மெல்லிய சூட்டில் வைக்கவும் அல்லது நிற்பாட்டிவிடவும். வெந்தயம் வறுபட்டவுடன் எள்ளை அதனுடன் சேர்த்து வறுக்கவும். பருப்பில் + சட்டியில் உள்ள சூடு வெந்தயம், எள்ளு வறுபடப் போதுமானது.வறுத்த பொருட்களை ஆறவிட்டு இயந்திரத்தில் அல்லது அம்மியில் வைத்து நல்ல தூளாக அரைத்து எடுக்கவும். அரிசியை கழுவி உப்புச் சேர்த்து சோறாக சமைத்து எடுக்கவும்.
பின்பு ஒரு பாத்திரத்தை சூடாக்கி அதில் நல்லைண்ணையைவிட்டு கடுகைச்சேர்த்து வெடித்து பொரிய விடவும். பின்பு அதனுள் செத்தல் மிளகாய்த் துண்டுகள், கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுள் கரைத்துவைத்த புளிக்கரைசல் 2 – 2 1/2 கப் சேர்த்து உப்பு, மஞ்சள் சேர்த்து கொதிக்கவிடவும். புளிக்கலவை வற்றி இறுக்கமாக வரும் பொழுது அரைத்து வைத்த பருப்புப் பொடி சிறு சிட்டிகை சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும். பின்பு இந்த கலவையையுடன் சமைத்து வைத்து சோற்றை சிறிய அளவில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து எடுக்கவும். ஒரேபடியாக எல்லா சோற்றையும் சேர்த்தால் சில வேளைகளில் சோறு அதிகமாகவும் புளிக்கலவை காணாமலும் இருக்கும். எனக்கு 3 மேகரண்டி சோறு மிஞ்சியது.

Thanks : Point Pedro Recipes – பருத்தித்துறை சமையல்