முள்ளிவாய்க்கால் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 90 வயது பாட்டி..!

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 90 வயது பாட்டி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.முள்ளிவாய்க்கால் முருகன் கோயில் மண்டபத்தில் வாழும் ஒருவரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.இந்நிலையில், கடந்த 20ம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட பல இடங்களில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த முதியவர் இருக்கும் பகுதிக்கு உறவினர்களினால் செல்லமுடியவில்லை என்றும்,உணவு வழங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.