அதிகாலை வேளையில் வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட மூன்று வயதுக் குழந்தை அதிரடியாக மீட்பு..!!

அம்பாறையில் வீடு ஒன்றில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட 3 வயதுடைய பெண் குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் நித்திரையில் இருந்து எழுந்தபோது, தமது மகளை காணவில்லை என்று குழந்தையின் தாயார் முறையிட்டிருந்தார்.இதனையடுத்து அந்த தாயையும் அழைத்துக்கொண்டு காவல்துறையினர் பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.இதேவேளை உந்துருளி ஒன்றில் சென்றுக்கொண்டிருந்த சிவில் பாதுகாப்பு அலுவலர் ஒருவர்m வீதியில் அழுகை சத்தத்துடன் குழந்தை ஒன்றை ஒருவர் தூக்கிச்செல்வதை கண்டு அவரை விசாரித்துள்ளார்.இதன்போது குழந்தை ஒன்றை தாம் கண்டதாகவும் தமது வீட்டுக்கு அதனை எடுத்துச்செல்வதாகவும் அந்த மனிதர், சிவில் பாதுகாப்பு அலுவலரிடம் கூறியுள்ளார்.இதனையடுத்து, குழந்தையுடன் தம்முடன் உந்துருளியில் வருமாறு சிவில் பாதுகாப்பு அலுவலர் குறித்த மனிதரை அழைத்துள்ளார்.முதலில் மறுத்தபோதும் பின்னர் அந்த மனிதர் சிவில் பாதுகாப்பு அலுவலரின் உந்துருளியில் ஏறியுள்ளார்.இந்தநிலையில் அவர்கள் இருவரையும் சிவில் பாதுகாப்பு அதிகாரி காவல்துறை நிலையத்துக்கு அழைத்து சென்றநிலையில் அந்த மனிதரிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டது.விசாரணையின்போது, குழந்தையை கடத்திச்சென்றவர் அந்த குழந்தையின் உறவினர் என்பது தெரியவந்தது.