இலங்கையில் அறிமுகமாகும் புதிய ரோபோ.!

தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி புதுமைகளை உருவாக்கக்கூடிய திறமையான நபர்களுக்கு நாட்டில் பஞ்சமில்லை. அந்த வகையில், இலங்கையில் முதல் மானுடவியல் உயர் தொழில்நுட்ப ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டயசென் குமாராய என அந்த ரோபோவிற்கு பெயரிடப்பட்டுள்ளது.

அரிமெக் நிறுவனத்தினால் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சமீரா பிரசாத் ஜயசிங்க கருத்து தெரிவிக்கும் போது “இந்த ரோபோவை உருவாக்க சுமார் மூன்று ஆண்டுகள் ஆகின.இது தெற்காசியாவின் மிக உயரமான ரோபோ என்றும் சமீரா பிரசாத் ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.இந்நிலையில், தியாசென் குமாரா என்ற ரோபோ எதிர்காலத்தில் தாமரை கோபுரத்தில் வரவேற்பாளராக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.