இலங்கையின் சுகாதார சேவை தொடர்பில் அமெரிக்கப் பிரஜையிடமிருந்து கிடைத்த பாராட்டு.!!!

இலங்கையின் சுகாதார சேவை அமெரிக்காவை விட அதிகரித்த வசதியுடன் உள்ளதாக தெரிவித்து ஒரு அமெரிக்கப் பிரஜை தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

எலியானா அபிசெல்லா என்பவரே மேற்படி பாராட்டை தெரிவித்தவராவார்.அவர் தனது நீண்டகால வயிற்று வலியை பரிசோதிக்க அக்கரைபற்று ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.டாக்டர் பி.கே ரவீந்திரன் தலைமையிலான குழு.இந்த காரணத்தை அப்பென்டிசிடிஸ் என்று கண்டறிந்து தேவையான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியிருந்தார்.இதனையடுத்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய அவர் மேற்படி பாராட்டைத் தெரிவித்துள்ளார்.